வடமராட்சியில் தென்பகுதி மீனவர்கள் அத்துமீறி கடலட்டை பிடிக்கப்பது தடுக்கப்படுமா?

மிழர் பகுதிகளுக்குள் காணப்படும் தொழில் வளங்கள் அனைத்தும் தற்போது அத்துமீறி பறிக்கப்பட்டு அல்லது பயன்படுத்தப்பட்டு வரும் நிலையே பல பிரதேசங்களில் இடம்பெற்று வருகிறது.

அதில் ஒன்றாக தற்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சனை தான் வடமராட்சி கிழக்கில் தென்பகுதி சிங்கள மற்றும் முஸ்லிம் மீனவர்களின் அத்துமீறிய கடலட்டை பிடிப்பாகும்.

ஏற்கனவே முல்லைத்தீவில் தமிழரின் கடற்பகுதியில் தங்கியிருந்து அத்துமீறிய மற்றும் சட்டவிரோத மீன்பிடியும் கடலட்டபைடியும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலேயே வடமராட்சியிலும் அத்துமீறி தங்கியிருந்து கடலட்டை பிடி மேற்கொள்ளப்படுகிறது.

இந்த விவகாரத்தில் தென்பகுதி மீனவர்களுக்கு ஆதரவாக இராணுவம், பொலிஸார் மற்றும் அவர்கள் சார் அரசியல்வாதிகள் மட்டுமல்ல எம்மிடையில் உள்ள சிலரும் காணப்படுகின்றனர்.

விவகாரம் : குறித்த வடமராட்சி கிழக்கு பகுதியில் "கடற்றொழில் நீரியல்வள துறை பணிப்பாளரால் நிபந்தனையுடன் கடலட்டை பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் தங்கியிருந்து வாடியமைத்து தொழில் செய்ய பிரதேச செயலரே அனுமதி வழங்க வேண்டும் ஆனால் தான் அனுமதிக்கவில்லை என மருதங்கேணி பிரதேச செயலர் தெரிவிக்கிறார்.

ஆனால் தனிப்பட்டவர்கள், சில மீனவ சங்கங்கள் அனுமதி கடிதத்தை கொடுப்பதுடன் பணம் பெற்றும் அனுமதிக்கப்படுகின்றனர் இதனால் அதிகமானோர் தங்கியுள்ளதால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது" என தெரிவிக்கப்படுகிறது.

கடலட்டை பிடிக்கும் அனுமதி ஐந்து வருடமாக வெளியூர் மீனவர்களும் வழங்கப்படுகிறது ஆனால் தற்போது தான் அவர்கள் ஒரு மாதமாக தங்கியிருந்து வாடியமைத்து தொழில் செய்கின்றனர் இதற்கு அரசியல் துணையும் இராணுவ, பொலிஸ் ஆதாரவு மட்டுமல்ல எம்மவர்கள் சிலரினால் கடற்கரை காணிகள் பெருந்தொகை பணத்திற்கு குத்தகைக்கு விட்டுள்ளதும் காரணமாகிறது.//

இவ்வாறு நாமே பணத்திற்கு ஆசைப்பட்டு தெற்பகுதியினருக்கு எமது கடற்பகுதியில் வாடியமைத்து தொழில் செய்ய விட்டால் வடமராட்சியில் உள்ள மீனவ குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை இழப்பதுடன் வளத்தையும் இழந்து தவிக்க வேண்டிய நிலையே ஏற்படும் இதனை காணி வழங்கியோர் கூட சிந்திக்கவில்லை அவ்வாறானவர்களுக்கு தேவை பணம் மட்டுமே.

அங்கு வாடியமைத்து தொழில் செய்யும் தென்பகுதி மீனவர்கள் கடற்கரை பகுதிகளில் மலம் கழிப்பதால் கடற்பகுதியின் சுகாதாரமும் சீர்கேடாகிக்கொண்டிருக்கிறது. எனவே உள்ளூர் மீனவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை பாதுகாக்க அனைத்து சம்பந்தப்பட்ட தரப்பினரும் ஆக்கபூர்வமாக செயற்பட்டு கடலட்டை பிடிக்கு தென்பகுதி மீனவர்களை வெளியேற்ற வேண்டும். கடற்றொழில் மற்றும் நீரியல்வள துறை அமைச்சு தன் இனம் சாராது இவ் விடயம் மீது கவனம் செலுத்த வேண்டியது கட்டாயமானது.

இல்லையேல் இவ்வாறு கடலட்டை பிடிப்பதற்கு எதிராக அண்மையில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட வடமராட்சி கிழக்கு மீனவர்களை கடற்படை புலனாய்வாளர்களை கொண்டு கடத்தல் மற்றும் கொலை அச்சுறுத்தல் விடுத்தது போல் அச்சுறுத்தி அவர்கள் கடலட்டை பிடியில் ஈடுபடுவார்கள் எமது மீனவர்கள் பாதிப்படைவார் இப்படியானே நிலையே ஏற்படும் அது தடுக்கப்பட வேண்டியது கட்டாயமானது.

எமது பகுதி மீனவர்கள் கடலட்டை தொழில் செய்ய தெரியாமல் இருப்பதும் வெளியூர் மீனவர்களின் அத்துமீறல்களுக்கு ஒரு காரணமாக அமைந்திருக்கிறது ஆகவே பல இலட்சம் ரூபாவிற்கு மேற்பட்ட வருமானத்தை ஈட்டித்தர கூடிய கடலட்டை தொழில் முறைகளை எமது மீனவர்களுக்கு கற்பித்து தமது கடற்பகுதியில் அவர்களை கடலட்டை தொழிலில் ஈடுபடுத்த கூடிய செயற்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பிலும் மீனவ சங்கங்கள் கோருவது சிறந்ததாக அமையும் என்று நான் எண்ணுகிறேன்.

12/06/2018
#பிரகாஸ்

Comments

Popular posts from this blog

"கண்ணிமைக்கும் நேரத்தில் உயிரைப் பறிக்கும் மின்னல்"

"பயங்கரவாதச் சட்டம் அப்பாவிகளுக்கு எதிராக திரும்பும் போது மகிழ முடியுமா?"

"இஸ்லாமிய அரசு (IS) பயங்கரவாதத்தின் தாக்கம் தமிழரை பாதிக்குமா?"