சாராயக்கடை சிந்தனையும் சிறிதரனும் - ஞா.பிரகாஸ் (ஊடகவியலாளர்)

Search This Blog

Thursday, May 10, 2018

சாராயக்கடை சிந்தனையும் சிறிதரனும்

யாழ்ப்பாணத்தில் 64 சாராய கடைகள் உள்ளது ஆனால் கிளிநொச்சியில் ஒரு சாராயக்கடை கூட இல்லை எனவே கஞ்சா மற்றும் கசிப்பு பாவனையை தடுக்க சாராய கடை ஒன்று அல்லது இரண்டை அமைக்க வேண்டும் என சில தினங்களுக்கு முன் சிறிதரன் எம்பி தெரிவித்திருந்தார்.

இதனை கேட்கும் போது வேடிக்கையாக இருக்கிறது கசிப்பு மற்றும் கஞ்சா பாவனையை சாராய கடைகள் அமைத்து தடுக்க முடியும் என நினைப்பது வெறும் மடைத்தனமான சிந்தனையாகும்.

64 சாராய கடைகள் இருப்பதாக கூறும் யாழ்ப்பாணத்தில் கூட கசிப்பு, கஞ்சா போன்ற போதை பாவனைகள் இல்லாமல் இல்லை அப்படி இருக்கையில் சாராய கடைகளை அமைத்து எவ்வாறு அதனை தடுத்துவிட முடியும்.

கஞ்சாவை வடக்கிற்கு கொண்டுவந்து இங்குள்ள இளைஞர்களுக்கு விற்பனைக்கு வழங்கி மக்களிடையில் அதனை பரப்பிவிடுபவர்களை தடுப்பது பற்றி சிந்திக்காமல், மக்களில் சிலர் கசிப்பு காய்ச்சி விற்பனை செய்ய காரணம் என்ன என்பதையும் ஆராயாமல் மக்கள் பிரதிநிதிகளாக இருந்துகொண்டு சாராய கடை வைக்கும் உரிமையாளர்கள் போல் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அடிப்படை வாழ்வாதார உதவிகள் கிடைக்காமல் இன்று சமூகத்தில் தவறான வழிக்கு சென்று கசிப்பு காய்ச்சவும், கஞ்சா விற்கவும், விபச்சாரம் செய்யவும் துணிந்துவிட்டார்கள் எனவே நாம் ஆராய வேண்டியது போதையை தடுக்க போதை நிலையங்கள் அமைப்பது பற்றி அல்ல கசிப்பு காய்ச்சும், கஞ்சா விற்கும் நிலை ஏன் ஏற்பட்டது அதனை தடுத்து தவறான வழிக்கு செல்வதை நிறுத்துவது தொடர்பில் தான்.

அப்போது தான் அதனை உற்பத்தி செய்வதை விநியோகிப்பதை முடிந்தளவு நிறுத்த முடியும் அதன் பின்னர் கஞ்சா போன்ற போதை பொருட்களை விற்பனைக்கு வழங்கும் கஞ்சா கடத்தல்காரர்கள் தொடர்பில் சரியான முறையில் பொலிஸார் நடவடிக்கை எடுத்தால் அவற்றை குறைத்துவிட முடியும்.

ஆனால் இது தொடர்பில் சிறிதரன் போன்ற அரசியல்வாதிகள் ஆராய்ந்து பேசமாட்டார்கள் மடைத்தனமாக கசிப்பு, கஞ்சாவை தடுக்க என கூறி சாராய கடைகளை அமைக்க ஆதரவு வழங்கி அவற்றில் வருமான பங்கினை தாமும் பெறுவதற்கே சிந்திப்பார்கள்.

09/05/2018
#பிரகாஸ்