டில்ஷானின் கைது பழிவாங்கலா? - ஞா.பிரகாஸ் (ஊடகவியலாளர்)

Search This Blog

Thursday, May 9, 2019

டில்ஷானின் கைது பழிவாங்கலா?


சமூக செயற்பாட்டாளரும், முகநூல் கட்டுரையாளருமாக அறியப்பட்ட நண்பர் டில்ஷான் மொஹமட் (Dilshan Mohamed) நாட்டில் நிலவும் அசாதாரண சூல்நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார் என அறிய முடிகின்றது.

எந்தச், சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். என்பது தெரியவில்லை. ஆனால், இவரது கைது பழிவாங்கலாக இருக்கும் என்று தோன்றுகின்றது.

புத்தளம் - அருவக்காலு குப்பை மேட்டுக்கு எதிரான போராட்டச் செயற்பாட்டாளர்களில் அவரும் ஒருவராக இருந்தவர். புத்தளம் குப்பை மேட்டு பிரச்சினை தொடர்பில் பத்திரிகை கட்டுரை ஒன்றை எழுதும் நோக்கில் கடந்த மாதம் அவருடன் அழைப்பெடுத்து அது தொடர்பில் பேசியிருந்தேன்.

தகவல்களை வழங்கிய அவர், நாட்டில் இன, மத முரண்பாடுகள் காணப்படும் நிலையில் இந்தப் போராட்டம் மூலம் புத்தளத்தில் தமிழ், முஸ்லிம், சிங்களம் என்று மூவின மக்களும் ஒற்றுமையுடன் செயற்படுவது குறித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்திருந்தார்.

நேற்று அவரது கைது பற்றி அறிந்த போது அதிர்ச்சியாக இருந்தது. புத்தளம் விவகாரத்தை வைத்து இந்த சந்தர்ப்பத்தில் பழிவாங்கல் முயற்சியாக இது இடம் பெற்றுள்ளதோ? என்று சந்தேகம் கொள்கிறேன்.

08.05.2019
#பிரகாஸ்